வரும் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு செல்லக் கூடிய அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன . இதற்காக 3 கோடிக்கும் அதிகமான பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .
இந்த திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைக்கிறார். அதேபோன்று கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டமும் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது .
மேலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பாட பொருள்களை அவர்களின் மடிக் கணினிகளில் பதிவேற்றம் செய்துதரும் திட்டமும் இன்று துவங்கப்படுகிறது. இந்த 3 திட்டங்களையும் இன்று தலைமைச் செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார் .
மேலும் படிக்க...
ஆம்பூரில் பைக் பறிமுதல் செய்யப்பட்டதால் இளைஞர் தீக்குளிப்பு: நடந்தது என்ன?
இசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைவாழ்வு: 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று..
இதனை தொடர்ந்து நாளை முதல் 3 திட்டங்களும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education department