பி.இ/ பி.டெக்., படிப்புகளுக்கான 2-ஆம் ஆண்டு சேர்க்கை ஆன்லைனில் நடைபெறும் - அமைச்சர் அன்பழகன்

பி.இ., பி.டெக்., இரண்டாமாண்டு நேரடி சேர்க்கையும், பகுதிநேர பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கும் இணையதளம் வாயிலாகவே கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்.

பி.இ/ பி.டெக்., படிப்புகளுக்கான 2-ஆம் ஆண்டு சேர்க்கை ஆன்லைனில் நடைபெறும் - அமைச்சர் அன்பழகன்
அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • Share this:
பி.இ/ பி.டெக் படிப்புகளுக்கான இரண்டாமாண்டு சேர்க்கை, பகுதிநேர சேர்க்கை மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை சேர்க்கை ஆகியவை இணையதளம் வாயிலாகவே நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 15-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருவதை குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இணையதள பதிவு முடிவடைந்த பின்னர், ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.  அதன்பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பும் இணையதளம் வழியாகவே நடைபெறும் எனக் கூறியுள்ள அமைச்சர் கே.பி.அன்பழகன்,கொரோனா தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்க, பி.இ., பி.டெக்., இரண்டாமாண்டு நேரடி சேர்க்கையும், பகுதிநேர பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கும் இணையதளம் வாயிலாகவே கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்.


பி.இ., பி.டெக்., பகுதிநேர படிப்பு மற்றும் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு செய்வதற்கான இணையதள முகவரி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வும் வீட்டிலிருந்தே இணையதளம் மூலம் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading