+1ல் தேர்ச்சி பெறாத 29 ஆயிரம் மாணவர்களுக்கு டி.சி. கொடுத்தது அம்பலம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் என்பதை, மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

+1ல் தேர்ச்சி பெறாத 29 ஆயிரம் மாணவர்களுக்கு டி.சி. கொடுத்தது அம்பலம்
12- ம் வகுப்பு மாணவர்கள் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: December 28, 2018, 2:17 PM IST
  • Share this:
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெறாத 29, 000 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாணவர்களை 12-ம் வகுப்பில் சேர்க்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களையும், 12-ம் வகுப்பில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் துறை ஆய்வுசெய்தது. அப்போது, தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகள் ஆகியவற்றில் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 29, 000 மாணவ, மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் மாணவர்களை நீக்கியது குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் என்பதை, மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதிக்குள் தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


மாணவர்களை தேர்வில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், 12-ம் வகுப்பில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

Also see... பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு:
First published: December 28, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்