இந்த ஆண்டு தமிழகத்தில் 29 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன...!

தொடர்ந்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதால் பொறியியல் கல்லூரிகள் அண்டுதோறும் மூடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் 29 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகின்றன...!
தொடர்ந்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதால் பொறியியல் கல்லூரிகள் அண்டுதோறும் மூடப்பட்டு வருகிறது.
  • News18
  • Last Updated: March 9, 2020, 3:42 PM IST
  • Share this:
தமிழகத்தில் இந்த ஆண்டு 29 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும்  நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது  542 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் பொறியியல் படிப்பில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் சில கல்லூரிகள் கடந்த ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 11 தனியார்  பொறியியல் கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளனர்.


அதேபோல வரும் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற கடந்த பிப்ரவரி 21-ம் தேதி வரை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்திருந்தது. ஆனால்  குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் 542 கல்லூரிகளுள்  18 கல்லூரிகள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கவில்லை.

குறிப்பிட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததே  அந்த  கல்லூரிகள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. எனவே 29 பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு மூடப்படும்  நிலை ஏற்ப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அங்கீகாரம் வழங்க அண்ணா கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட குழு ஆய்வு நடத்தியதில் 90 கல்லூரிகள் உட்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லாததால் அந்த கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.அதே போல இந்த ஆண்டும் அங்கீகாரம் வழங்க  பரிந்துரை செய்திட குழு அண்ணா பல்கலை குழு அமைத்துள்ளது அந்த வகையில் உட்கட்டமைப்பு வசதி இல்லாத 80-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைக்க வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Also see...
First published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading