கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. பொறியியல் படிப்புகளில் சேர முதல் நாளிலேயே 25000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக 12ஆம் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மதிப்பெண் விவரம் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று காலை தொடங்கியது.
அதன்படி, 143 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 10 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தளங்களில் விண்ணப்பங்களை www.tngasa.org, www.tngasa.in என்ற இணையதயத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொறியியல் படிப்பிற்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை www.tneaonline.org மற்றும் www.tndte.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டு, செப்டம்பர் 4ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிட உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரையிலும் நடத்துவதற்கு உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாலும், இந்தமுறை 550 மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கை 15 மடங்கு அதிகரித்துள்ளதாலும், கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை மட்டுமின்றி பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கும் மாணவர்களிடையே கடும் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் அந்தந்த கல்லூரி உதவி மையங்கள் மூலம் நேரடியாக வழங்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி பாடப் புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என மாற்றப்படுவது போல் உயர்கல்வி பாடப் புத்தகங்களிலும் ஒன்றிய அரசு என்று மாற்றப்படும் என தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய் மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் (பி.எட்) மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் இந்தாண்டு கல்வி கட்டணம் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் பொன்முடி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழகம் மாணவர் நலன் கருதி அல்ல கடந்த ஆட்சியில் பெயர் வைக்க வேண்டும் என்ற அளவுக்கு துவங்கப்பட்டது. இதுவரை அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட 4 பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
Must Read : ஆளுநராகிறாரா எடியூரப்பா..? கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்?
கடந்த ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறையில் பல்வேறு பணி நியமன முறைகேடுகள் நடைபெற்றது. அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் தங்கை திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உள்ள சசர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருந்த பாடப்புத்தகங்களில் பல்வேறு தவறுகள் நடைபெற்றது. அதனை சரிசெய்து புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது. கல்லூரிகள் திறப்பது குறித்து கொரோனா பரவல் குறைந்த பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College Admission, College student