ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் படிப்பை பாதியில் நிறுத்திய 2461 மாணவர்கள் - மத்திய அரசு தகவல்

ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் படிப்பை பாதியில் நிறுத்திய 2461 மாணவர்கள் - மத்திய அரசு தகவல்
ஐஐடி சென்னை
  • News18
  • Last Updated: August 2, 2019, 12:10 PM IST
  • Share this:
கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதுள்ள ஐஐடி கல்லூரிகளில் இருந்து 2 ஆயிரத்து 461 மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மாநிலங்களவையில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், படிப்பை பாதியில் நிறுத்திய 2 ஆயிரத்து 461 மாணவர்களில் 57 சதவீதம் பேர் டெல்லி மற்றும் காரக்பூர் ஐஐடி கல்லூரிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியிலிருந்து 190 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர் என்றும் இந்த எண்ணிக்கையில் 47 புள்ளி 5 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட, மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இடைநிற்றலுக்கு மாணவர்களின் உடல்நிலைபாதிப்பு , வேறு கல்லூரிகளுக்கு மாறுதல் ஆகியவை காரணமாக இருக்கலாம் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விளக்கமளித்தது.

First published: August 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்