முகப்பு /செய்தி /கல்வி / புழல் மத்திய சிறையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 21 பேர்

புழல் மத்திய சிறையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 21 பேர்

புழல் சிறை

புழல் சிறை

Public Exam | புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில்  21 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

  • Last Updated :

திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 23>043 மாணவர்கள் 20606 மாணவிகள் என 43649 பேர் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுதினர். புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில்  21 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் காலதாமதமாக தொடங்கியதால் மார்ச் மாதம் நடைபெறும் பொது தேர்வுகள் இந்த ஆண்டு இன்று தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி இன்று பொன்னேரி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 23,043 மாணவர்கள்20,606 மாணவிகள் என 43,649 பேர் இன்று  12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். 8 மையங்களில் தனி தேர்வர்கள் தேர்வு எழுத ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது . புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் நான்கு பெண் சிறைவாசிகள் 17 சிறைவாசிகள் என மொத்தம் 21 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.

Also Read : முழுநேர முனைவர் பட்டம்: ரூ.1 லட்சம் கல்வி ஊக்கத்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கண் பார்வையற்ற மாணவர்கள் 28 பேரும் காதுகேளாதோர் 4பேரும் மொத்தமாக 32 பேர் பூவிருந்தவல்லி பார்வையற்றோர் காது கேளாதோர் சிறப்பு பள்ளியில்  தேர்வு எழுதினர். மாணவ மாணவியர் தனித்தேர்வர்கள் அச்சமின்றி தேர்வு எழுத  ஏற்பாடுகளை மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

First published:

Tags: Public exams, Puzhal jail, Puzhal Prison