ஹோம் /நியூஸ் /கல்வி /

8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை பெறும் தேசிய அளவிலான தேர்வு - விண்ணப்பிப்பது எப்படி?

8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை பெறும் தேசிய அளவிலான தேர்வு - விண்ணப்பிப்பது எப்படி?

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்வு

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்வு

2022-2023-ம் கல்வியாண்டிற்கான 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2022-2023-ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2023 பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கான விண்ணப்பங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை இத்துறையின் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

Also Read : தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா.. மத்திய அரசின் 2 துறைகள் முரண்பட்ட பதில் - அதிர்ச்சி தகவல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து, தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.01.2023 ஆகும்.

First published:

Tags: Scholarship, School students