சென்னை ஐஐடி (Chennai IIT)-ல் தொழில்நுட்பப் படிப்புகள் தவிர்த்து ஒரு சில ஒருங்கிணைந்த (Integrated) கலை, அறிவியல் (5 ஆண்டு காலம்) படிப்புகளும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அடுத்த கல்வியாண்டு முதல் MA in Development Studies, MA in English Studies, MA in Economics ஆகிய 3 படிப்புகளை 2 ஆண்டுகால படிப்புகளாக அறிமுகம் செய்ய சென்னை ஐஐஐ முடிவு செய்துள்ளது.
5 ஆண்டுகள் Integrated படிப்பாக இருப்பதை, 2 ஆண்டுகள் படிப்பாகவும் அறிமுகம் செய்து, இளங்கலை முடித்தவர்கள் நேரடியாக முதுகலை படிப்பில் சேரவும் சென்னை ஐஐடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் நுழைவுத் தேர்வின் ( HSEE ) அடிப்படையில் 2 ஆண்டுகால M.A., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், ஒவ்வொரு பிரிவிலும் 25% இடங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டாயமாக ஒதுக்கப்படும் என்றும் சென்னை ஐ.ஐ.டி., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்பம் கலை அறிவியல் என பலதரப்பட்ட உயர்கல்வி படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பன்முகத் தன்மை வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
Must Read : அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரி... திறமை மிக்கவர் வரவேண்டும் - நயினார் நாகேந்திரன்
அதன் அடிப்படையில், சென்னை ஐஐடியில் கலைப் பிரிவு சார்ந்த பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகின்றன. ஏற்கனவே ஆன்லைன் வழியில் இளங்கலை டேட்டா சயின்ஸ் படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.