தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம் என்று பொறியியல் மாணவர் சேர்க்கை பிரிவு அறிவித்தது.
அதன்படி, பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள்
https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில் 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல் நாளில் 18,763 பேர் பதிவுசெய்துள்ளதாக மாணவர் சேர்க்கை பிரிவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 4,199 பேர் கட்டணம் செலுத்தியிருப்பதாகவும், 790 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : அதிமுக பொதுச் செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? - தனித் தீர்மானம் இன்று இறுதி செய்ய வாய்ப்பு
இதனை தொடர்ந்து ஆகஸ்டு 16ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.