ஹோம் /நியூஸ் /கல்வி /

முதுகலை பொறியியல் கலந்தாய்வில் 18%  ஜிஎஸ்டி கட்டணம் கட்டாயம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

முதுகலை பொறியியல் கலந்தாய்வில் 18%  ஜிஎஸ்டி கட்டணம் கட்டாயம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

எம்.இ.எம்டெக், எம்பிளான் படிப்புகளில்கலந்தாய்விற்கும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டுமென அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முதுகலைப் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கலந்தாய்வுக் கட்டணமாக 18 சதவீதம் ஜிஎஸடி செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும் முதுகலை பொறியியல் படிப்பில் எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜனவரி 3 ந் தேதி முதல் பிப்ரவரி 1 ந் தேதி வரை நடைபெறும் என அண்ணாப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் முதுகலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குவதற்கு முன்னரே   7525 இடங்கள் காலியாக இருக்கிறது.

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்பு கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் மண்டல கல்லூிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும், சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2021-22ம் கல்வியாண்டில்  சேர்வதற்கான  தேர்வு நடத்தப்பட்டது. மேலும் கேட் நுழைவுத்தேர்வு எழுதி தகுதிப்பெற்ற மாணவர்களிடம் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக் கழகம் பெற்றது.

முதுகலைப் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு பிரச்சனையால் தாமதமாக துவங்கி உள்ளது. வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டு சிக்கல் காரணமாக நடப்பாண்டில் முதுகலை பொறியியல் மாணவர்கள் சேர்க்கை கால தாமதமாக துவக்கி உள்ளது.

Also Read : 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதி அறிவிப்பு - முழு அட்டவணை விவரம்

அண்ணாபல்கலைக் கழக  மாணவர்கள் சேர்க்கை குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக் கழகம் , உறுப்புக்கல்லூரிகளில் கேட் தேர்வின் மூலம் 732 இடங்களும், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வின் மூலம் 1453 மாணவர்கள் என 2185 பேர் சேர்க்கப்பட உள்ளனர். அதேபோல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் கேட் தேர்வின் மூலம் 624 இடங்களும், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வின் மூலம்824 மாணவர்கள் என 1448 பேர் சேர்க்கப்பட உள்ளனர். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 6977 இடங்கள் என 10,610 முதுகலை இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக 3085 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி 3 ந் தேதி துவங்கி பிப்ரவரி 1 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு கட்டணமாக 5000 மும், எஸ்.சி.எஸ்சிஏ, எஸ்டி மாணவர்கள் 1000 மும் செலுத்த வேண்டும். மேலும் பொதுப்பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு கட்டணம் 300 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் 18 சதவீதம் 54 ரூபாயும், எஸ்சி, எஸ்சிஎ, எஸ்டி மாணவர்கள் 150 ரூபாயும், ஜிஎஸ்டி கட்டணம் 27 ரூபாயும் சேர்த்து கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலைப் பொறியியல் படிப்பில் 10610 இடங்கள் உள்ள நிலையில் 3085 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர். கரோனா தொற்றின் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக முதுகலைப் படிப்பில் சேர்வதற்கான விருப்பம் குறைந்துள்ளது. மேலும் முதுகலைப் படிப்பிற்கான வேலை வாய்ப்பும் குறைந்துள்ளதால், கலந்தாய்வு துவங்குவதற்கு முன்னரே  7525 இடங்கள் காலியாக இருக்கிறது.

Published by:Vijay R
First published:

Tags: Anna University