முகப்பு /செய்தி /கல்வி / அனுமதி பெறாமல் இயங்கும் 162 தனியார் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அனுமதி பெறாமல் இயங்கும் 162 தனியார் பள்ளிகள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

காட்சிப்படம்

காட்சிப்படம்

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் சில முறையான அனுமதி பெறாமல் மாணவர்கள் சேர்க்கை நடத்தி செயல்பட்டு வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பள்ளிகளில் 162 பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைத் தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சுயநிதி மெட்ரிகுலேசன், சி.பி. எஸ்.இ., சர்வதேச, பன்னாட்டுப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் உரிய அனுமதி பெறுவது அவசியமாக உள்ளது.

சில தனியார் பள்ளிகள் ஒரு பள்ளிக்கு அனுமதி வாங்கி, அதனைக் கொண்டு கிளை பள்ளிகளைத் திறந்து செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்துக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 162 தனியார்ப் பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read : ஆசிரியர் தகுதித் தேர்வு காரணமாக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: திறந்தநிலை பல்கலைக் கழகம் அறிவிப்பு

இந்த பள்ளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இருப்ப தாகவும், விரைவில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் பெற இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த பள்ளிகள் மீது மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Private schools, Tn schools