மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு - அரசு அமைத்த ஆய்வுக்குழு பரிந்துரை

நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, தனது பரிந்துரை அறிக்கையை இந்த வாரத்தில் அரசிடம் சமர்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு - அரசு அமைத்த ஆய்வுக்குழு பரிந்துரை
கோப்புப்படம்
  • Share this:
அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும்  மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர தனி இடஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அமைத்த ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய  ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தக் குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை  மேற்கொண்டதுடன், சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள், உள்ளிட்டோரிடம் கருத்துகளைப் பெறுவதற்கான கூட்டங்களை தற்போது நடத்தி முடித்தது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15 விழுக்காடு வரை மருத்துவப் படிப்பில் சேர தனி இடஒதுக்கீடு அளிப்பதற்கு நீதியரசர் கலையரசன் குழு  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, தனது பரிந்துரை அறிக்கையை இந்த வாரத்தில் அரசிடம் சமர்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


தற்போதைய நிலவரப்படி எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீடு மற்றும் அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கீழ் 6 ஆயிரம் இடங்கள் உள்ளன . 15 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டால், 900 இடங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Also see:
First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading