12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இயங்காமல் இருந்ததால், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 12 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்காக பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, வகுப்பு நடைபெற்று வருகின்றன.
வழக்கமாக மார்ச் மாத துவக்கத்தில் பொதுத்தேர்வு தொடங்கி மார்ச் இறுதி வாரத்தில் முடிவடையும் . கொரோனா காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் மே மாதம் நடைபெறுகின்றன.
காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு பிற்பகல் 1. 15 மணிக்கு முடிவடையும் மாணவர்களுக்கு கேள்வித்தாள்களை படிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்..
பொதுத்தேர்வை பொருத்தவரையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவிகிதம் அளவிற்கு பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன எனவே குறைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மட்டுமே பொதுத் தேர்வுக்கான கேள்விகள் இடம் பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஆண்டு விடைகளை தேர்ந்தெடுத்து பதிலளிக்கக் கூடிய வகையில் கூடுதலாக கேள்விகள் இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகி தெரிவிக்கின்றன.
தேர்வு அட்டவணை பின் வருமாறு...
நாள் |
கிழமை |
பாடம் |
மே 3 |
திங்கள் |
தமிழ் |
மே 5 |
புதன் |
ஆங்கிலம் |
மே 7 |
வெள்ளி |
தொடர்பு ஆங்கிலம்
கணினி அறிவியல்
உயிரி வேதியியல்
சிறப்பு தமிழ்
அரசியல் அறிவியல்
புள்ளியியல்
கம்ப்யூட்டர் அப்ளிகேசன்
ஹோம் சயின்ஸ்
இந்திய கலாசாரம் |
மே 11 |
செவ்வாய் |
இயற்பியல்
பொருளாதாரம்,
கணினி தொழில்நுட்பம் |
மே 17 |
திங்கள் |
கணிதம்,
விலங்கியல்
வணிகம்
நுண் உயிரியியல்
ஊட்டச்சத்து
ஜவுளி வடிவமைப்பு
உணவு நிர்வாகம்
வேளாண் அறிவியல்
நர்சிங் |
மே 19 |
புதன் |
உயிரியியல்
தாவரவியல்
வரலாறு
வணிக கணிதம் |
மே 21 |
வெள்ளி |
வேதியியல்
கணக்குப்பதிவியல்
புவியியல் |
உடனக்குடன் செய்திகளை அறிய இணைந்திருங்கள்.