முகப்பு /செய்தி /கல்வி / 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள்... வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள்... வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

மாதிரி படம்

மாதிரி படம்

பிளஸ் 2 பொதுத் தேர்வின் மொழிப் பாடப் பரீட்சையை 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு பள்ளிகளில் படித்த மாணவர்கள் எட்டு லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 49 ஆயிரத்து 599 மாணவர்கள் மொழிப்பாடத் தேர்விற்கு வரவில்லை. அதேபோல் தனித்தேர்வர்களாக பதிவு செய்த 8 ஆயிரத்து 901 பேரில் ஆயிரத்து 115 மாணவர்கள் மொழிப்பாடத் தேர்வை எழுதவில்லை.

பள்ளிகளில் படித்த மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை, வரும் ஜூன் மாதம் நடைபெறும் துணைத் தேர்வில் பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மொழித்தாள் தேர்வுக்கு வராத மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் மூலம் கண்டறிந்து, அடுத்து வரும் பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளில் பங்கேற்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: 12th exam, Public exams