முகப்பு /செய்தி /கல்வி / 10th, 12th Result: ரிசல்ட் பார்க்க முடியவில்லையா..? மார்க் தெரிய எளிமையான வழி இதோ...

10th, 12th Result: ரிசல்ட் பார்க்க முடியவில்லையா..? மார்க் தெரிய எளிமையான வழி இதோ...

தேர்வு முடிவுகள் வெளியானது

தேர்வு முடிவுகள் வெளியானது

TN 10th, 12th Result Website link: பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் ,  தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே மாதம் நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு  பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி அமைச்சர் அன்பில் மகேஷ் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

www.tnresults.nic.in,

www.dge1.tn.nic.in,

www.dge2.tn.nic.in,

www.dge.tn.gov.in

மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் பலரும் இணையம் வழியாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முயற்சித்ததால் இணைய பக்கத்தில் சேவை தாமதமானது.

நூலகத்தில் ரிசல்ட்:

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளிகளில் ரிசல்ட்:

மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

SMS வழியாக ரிசல்ட்:

top videos

    பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் ,  தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: 12th Exam results