முகப்பு /செய்தி /கல்வி / TN12th Result: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது... உங்கள் மார்க் இங்கே தெரிந்து கொள்ளலாம்

TN12th Result: 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது... உங்கள் மார்க் இங்கே தெரிந்து கொள்ளலாம்

தேர்வு முடிவுகள் வெளியானது

தேர்வு முடிவுகள் வெளியானது

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட்டார்.

  • Last Updated :

12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார். 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு  பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட்டார்.

இதையும் படிக்க: Exam Results: 12ம் வகுப்பில் 93.76%, 10ம் வகுப்பில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி

www.tnresults.nic.in,www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

top videos
    First published:

    Tags: 12th Exam results, School exam Result