12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!

பள்ளி மாணவிகள்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வருகின்ற ஏப்ரல் மாதம் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வருகின்ற ஏப்ரல் மாதம் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற மே மாதம் 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் 12-ம் வகுப்பு அறிவியல் மற்றும் தொழிற்ப் பிரிவு மாணவர்களுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் வருகின்ற ஏப்ரல் மாதம் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.
ஏப்ரல் மாதம் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை செய்முறை தேர்வுகளுக்கான மாணவர்களின் மதிப்பெண்களை முதன்மை கல்வி அலுவலர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டுமெனவும் அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

 
Published by:Ram Sankar
First published: