கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய (Supplementary Examination) தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவினை, நாளை மறுநாள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துளளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில், மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் அதே ஆண்டிலேயே உயர்க்கல்வியைத் தொடர்வதற்காக துணைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஜுலை/ஆகஸ்ட் மாதம் 12ம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், இத்தேர்வின் முடிவுகள் நாளை மறுநாள் பிற்பகல் 2.00 மணி முதல், மதிப்பெண் பட்டியலாக (Statement of marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிமுறைகள் :
தேர்வர்கள் வருகிற 22.08.2022 (திங்கட்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் தமது மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன் Result தோன்றும்.அதில் "HSE Second Year Supplementary Exam, Jul / Aug 2022 - Result - Statement Of Marks Download" என்ற வாசகத்தினை "Click" செய்தால் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வெண் (Roll No.) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களது மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:
துணைத் தேர்வில், தகுதியான மதிப்பெண் வழங்கவில்லை என்று தேர்வர்கள் கருதினால் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கு, தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 24.08.2022 (புதன்கிழமை) மற்றும் 25.08.2022 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: பொறியியல் கலந்தாய்வு: மாணவர்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் கேட்டு பெறுவதற்கான கட்டணம் ரூ. 275 ஆகும். ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் நகலை பெற்றுக் கொண்ட மாணவர்கள், தங்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வர வாய்ப்புள்ளது என்று நினைத்தால் மறுக்கூட்டல்/மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதையும் வாசிக்க: சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்
உயிரியல் பாடத்திற்கு மறுக்கூட்டல் கட்டணமாக ரூ.305-ம், ஏனைய பாடங்களுக்கு ரூ. 205ம் செலுத்த வேண்டும். கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தால், அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.