12-ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு விடைத்தாள் நகல் பெறுவதற்கான தேதி அறிவிப்பு எப்போது?

பள்ளி கல்வித்துறை

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு ஒரு வார காலமாகியும் மறுகூட்டல் , மறுமதிப்பீடு அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளியாகும்  அன்றே  மறுகூட்டல் , மறு மதிப்பீடு ,விடைத்தாள் நகல்கள் பெறுவது குறித்த விவரங்கள் வெளியிடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டுவரை இந்த நடைமுறையே தொடர்ந்து வந்தது. இந்த ஆண்டு முடிவுகள் வெளியாகி  ஒரு வார காலமாகியும் மறு கூட்டல், மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல்கள் பெறுவது எப்போது என்பது குறித்த விவரங்களை அரசுத்தேர்வுகள் துறை வெளியிடவில்லை.

இதற்கிடையே பொறியியல் சேர்க்கைக்கான கால அவகா சம் ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடனும்,  கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியிலான சேர்க்கை இந்த மாத இறுதியிலும் முடிவடைய உள்ளன.

உயர்கல்வி சேர்க்கைக்கான கால அவகாசம் குறைவாக உள்ள நிலையில், தேர்வுத்துறை மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கான அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.

மேலும் படிக்க...

பாட்டி சொன்ன வார்த்தையால் உயரங்களைத் தொட்ட அமுதா ஐ.ஏ.எஸ்..

விடைத்தாள் நகல்களை பெற்ற பிறகு பாட ஆசிரியர்களுடன் மாணவர்கள்  கலந்து ஆலோசனை செய்து அதன் பிறகு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு அந்த பாடம் மறுமதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான முடிவுகள் வருவதற்கு மேலும் சிலநாட்கள் ஆகும். எனவே உடனடியாக தேர்வுத்துறை இதற்குரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Published by:Vaijayanthi S
First published: