• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • பிளஸ் 1 பொதுத்தேர்வு & பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு

பிளஸ் 1 பொதுத்தேர்வு & பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு

கோப்பு படம்

கோப்பு படம்

வரும் 31ந் தேதி காலை 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

  • Share this:
மார்ச் 4-ம் தேதி துவங்கி 26 வரை 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக 26-ம் தேதி நடைபெறவிருந்த இறுதித் தேர்வுகள் நடைபெறவில்லை. இதனை அடுத்து, 11ம் வகுப்புக்கு நடைபெறாத இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 31-ம் தேதி காலை வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் மாணவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறுகூட்டல், மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல்கள் பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2tn.nic.in ஆகிய இணையதள பக்கங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...இந்தியாவில் 15 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

மார்ச் 24-ம் தேதி அன்று நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வை ஊரடங்கு காரணமாக தவறவிட்ட மாணவர்களுக்கு கடந்த ஜூலை 27-ம் தேதி அன்று மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளும் வரும் 31-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: