சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று நான்கு அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு சிபிஎஸ்இ கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக, கோவிட் பெருந்தொற்று காரணமாக 2021 கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பருவத் தேர்வுகளை இரு பருவத் தேர்வுகளாக நடத்தி வருகின்றன. முதல் பருவத் தேர்வு கடந்தாண்டே நிறைவடைந்த நிலையில், இரண்டாவது பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை நடைபெற்றது.
முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருந்தன.
நாட்டின் அநேக மாநிலங்களில் 10, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, உயர்க்கல்வி மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மும்பை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துள்ளது. ஆனால், சிபிஎஸ்இ வாரியம் தனது பருவத் தேர்வு முடிவுகளை இதுநாள் வரை வெளியிடவில்லை. இத்தனைக்கும் 50% பாடத்திட்டங்கள் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்கு பின்னர், மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரைகளுக்குப் பின்பும், மூன்றாம் கட்ட தகுதி பட்டியலை மும்பை பல்கலைக்கழகம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, 34 லட்சத்திற்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கள் எதிர் காலத்தைப் பற்றிய தெளிவான சிந்தனை பெறாமல் மனக்குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
முன்னதாக, மாணவர்களின் மனக்கவலைகளை போக்கும் வகையில், கடந்த 13ம் தேதி தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், கேரளா தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், இந்திய கம்பெனி செயலாளர்கள் மையம் ஆகியவற்றிற்கு சிபிஎஸ்இ வாரியம் கடிதம் எழுதியது.
இதையும் வாசிக்க: CUET UG: தேர்வு மையத்தை அடைய முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு: தேசிய தேர்வு முகமை
மேலும், மாணவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகை அடுத்து, இங்கிலாந்தின் Sheffield Hallam பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் கியூன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம் , சிங்கப்பூரின் Lasalle கலை கல்லூரி, மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நான்கு அயல்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கு சிபிஎஸ்இ வாரியம் கடிதம் எழுதியது தற்போது தெரிய வந்துள்ளது. அதில், தேர்வு முடிவுகள் அறிவிப்பு தொடர்பான உத்தேச தேதி குறித்தும், முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையைம் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: IBPS Admit Card Released: ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது
இதற்கிடையே, இந்த மாத இறுதிக்குள் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBSE