Tamilnadu 12th Result 2020 : விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 92.3 சதவிகித மாணவ மாணவியர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Tamilnadu 12th Result 2020 : விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை
கோப்பு படம்
  • Share this:
தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரையில் தமிழ்நாடு பாடத்தில் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வை பள்ளி மாணவர்கள் 7,79,931 எழுதினர். அதில், மாணவிகள் 4,24,285 பேரும், மாணவர்கள் 3,55,646 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்வு எழுதியவர்களில் மாணவியர் 94.80 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 89.41 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக கணினி பாடப்பிரிவில் 99.51% பேரும், கணிதப் பாடப்பிரிவில் 96.31 சதவீதம் பேரும், உயிரியல் பாடப் பிரிவில் 96.14 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.


மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறும் தேதி, தோல்வி அடைந்த மாணவர்கள் சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மறுக்கூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விடைத்தாள் மறுகூட்டலுக்கு தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேதி அறிவிக்கப்பட்ட பின் மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் மூலமாக இணைய தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading