11,12ம் வகுப்பில் மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - தமிழக அரசு அறிவிப்பு

news18
Updated: June 11, 2018, 5:47 PM IST
11,12ம் வகுப்பில் மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு - தமிழக அரசு அறிவிப்பு
கோப்புப் படம்
news18
Updated: June 11, 2018, 5:47 PM IST
11 மற்றும் 12-ம் வகுப்பில் மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே ஒரு தேர்வு மட்டும் நடத்தப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில், முதலிடம், 2-வது இடம், 3-வது இடம் என்ற பாகுபாடுகள் இருக்கக் கூடாது என புதிய ரேங்கிங் முறையை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். மேலும் மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இன்று 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களில் நடத்தப்படும் 2 தனித்தனி தேர்வுகள் இனி ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை முடிவு செய்து அறிவித்தது. மேலும், பள்ளி மாணவர்களின் சுமையையும், மன உளைச்சலையும் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக  தகவல் வெளியாகியது.

அதன்படி,  இன்று தமிழக அரசு இதுதொடர்பான அரசாணையை வெளியிட்டது. அதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மொழிப்பாடங்களில் ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்றும், இந்த முறை இந்த கல்வியாண்டில் இருந்தே பின்பற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களுக்காக மட்டும் 4 தேர்வுகள் தமிழ் 1ம் தாள் மற்றும் 2ம் தாள், ஆங்கிலம் 1ம் தாள் மற்றும் 2ம் தாள் என எழுதி வந்த நிலையில், இனி 2 தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் உள்ள 8 தேர்வுகளில் இருந்து 2 தேர்வுகள் குறைந்து 6 தேர்வு தான்  மாணவர்கள் எழுத வேண்டிருக்கும். அரசின் இந்த ஆணைக்கு  கல்வியாளர்கள் பலர் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
First published: June 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...