இன்று தொடங்குகிறது 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள்..!

பொதுத் தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்குகிறது 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள்..!
பொதுத் தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Share this:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. ஒழுங்கீனச் செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய பரிந்துரை செய்யப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. வரும் 26-ம் தேதிவரை நடைபெறும் இந்தத் தேர்வு காலை 10 மணிமுதல் மதியம் 1.15 வரை நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெற உள்ளது. இதில் 8,32,475 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


சென்னை மாவட்டத்தில் உள்ள 411 பள்ளிகளில் படித்த 46,779 மாணவர்கள், 159 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வின்போது தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்துவர தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வின் போது ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுத்தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.Also see...
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading