ஹோம் /நியூஸ் /கல்வி /

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது - 8.83 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது - 8.83 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

11th Public Exam : 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி, வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி, வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

  கொரோனா பரவல் காரணமாக, பள்ளி பொதுத் தேர்வுக்கான பாடங்கள் குறைக்கப்பட்டன. அதன்படி, குறைக்கப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது.

  இந்நிலையில், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு 3,119 மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதவுள்ளனர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

  Must Read : மிரட்டும் அசானி புயல்.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

  இந்த தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.  பொதுத்தேர்வில் எவ்வித குழப்பத்திற்கும் இடம் அளிக்காத வகையில், இதனை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித் துறை உறுதியாக உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் பல்வேறு ஏற்பாடுகளை  அதிகாரிகள் செய்துள்ளனர்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Examination, Public exams, School education