ஹோம் /நியூஸ் /கல்வி /

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

11th Public Exam Result | தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 ஆம் தேதி தொடங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10 ஆம் தேதி தொடங்கியது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு 3119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் பொதுத் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடதக்கது.

பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஜூன் 20-ம் தேதி வெளியானது. இந்நிலையில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவை மாணவர்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி : www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in

First published:

Tags: Public exams