10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குப் பதிவு செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்பு!

பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி, விதிகள், ஆவணங்கள் போன்றவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெறலாம்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்குப் பதிவு செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்பு!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: January 18, 2019, 1:02 PM IST
  • Share this:
10 வகுப்புப் பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள தனித் தேர்வர்களுக்கு (Private Students) 2019 ஜனவரி 7 முதல் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால் பொங்கல் உள்ளிட்ட விடுமுறை காலம் என்பதால் காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தனித் தேர்வர்கள் 2019 ஜனவரி 19-ம் தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி, விதிகள், ஆவணங்கள் போன்றவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெறலாம்.

மேலும் அருகில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் சென்றும் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு விண்ணப்பம் குறித்த தகவல்களைப் பெறலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: புத்தக கண்காட்சியில் தனித்து நிற்கும் கரிசல் மண் எழுத்தாளரின் குறுநாவல்
First published: January 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்