Home /News /education /

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

பள்ளி தேர்வு

பள்ளி தேர்வு

10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் தனித்தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தனித்தேர்வர்கள்  இன்று மதியம் 2 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு  நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி,  12ம் வக்ப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும்  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்குகிறது.

    10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9 ஆம் தேதி முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்கம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தனித்தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: 10th Exam, Public exams

    அடுத்த செய்தி