10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் முக்கிய மாற்றம் கொண்டுவரும் தமிழக அரசு!
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் முக்கிய மாற்றம் கொண்டுவரும் தமிழக அரசு!
மதிப்பெண் சான்றிதழ்
தமிழக அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை களையும் வகையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழில் முக்கிய மாற்றத்தை தமிழக அரசு கொண்டுவரவுள்ளது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு முதல் மாற்றம் கொண்டு வரப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் படித்த பயிற்று மொழியை பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் அச்சிட்டு வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆனால் இதற்கான சான்றிதழ்களை பெறுவதில் பெரிதும் குழப்பம் நிலவி வருகிறது. இதனை எளிதாக்கும் பொருட்டு, 1 ஆம் வகுப்பு முதல் 10ஆ ம் வகுப்பு வரையில் மாணவர்கள் படித்த பயிற்று மொழியும் மதிப்பெண் சான்றிதழில் அச்சிட்டு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து , அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும், நவம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரையிலான நாட்களில் மாணவர் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை எந்த பயிற்று மொழியில் பயின்றார் என்ற விவரங்களை கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் தனித்தனியே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.