முகப்பு /செய்தி /கல்வி / 10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு : தனித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு இதோ

10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு : தனித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு இதோ

செய்முறைத் தேர்வு

செய்முறைத் தேர்வு

வரும் 20ம் தேதி முதல் நடைபெறவுள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வெழுதிட தனித்தேர்வர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் வரும்  20ம் தேதி முதல் நடைபெறும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2023, ஏப்ரல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, (Science Practical Examinations) 20.03.2023 முதல் 24.03.2023 வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது. ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அத்தேர்வில் தேர்ச்சிபெறாத தனித்தேர்வர்கள், மேற்படி தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு செய்முறைத் தேர்வெழுதிட அறிவிக்கப்படுகிறார்கள்.

அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்கப் பெறாதவர்கள், இவ்வறிவிக்கையை தெரிந்துகொண்டு, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளும் பொருட்டு. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை அணுகு வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: 10th Exam, 10th Exam Result