Home /News /education /

தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருந்தது : தமிழில் சென்டம் எடுத்த மாணவி துர்கா

தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருந்தது : தமிழில் சென்டம் எடுத்த மாணவி துர்கா

மாணவி துர்கா

மாணவி துர்கா

தேர்வெழுதிய 9,12,620 மாணவர்களில் ஒரே ஒரு மாணவி மட்டும் மொழித் தேர்வில் நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

    தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருப்பதாக பத்தாம் வகுப்பு மொழித் தேர்வில் மாநிலத்தில்  முதல் மதிப்பெண் பெற்ற மாணவி துர்கா தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் இன்று 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  வெளியிட்டார். 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களில், 90.07 சதவிதத்துனர் தேர்ச்சி பெற்றனர்.

    இதில், திருச்செந்தூர் அருகே உள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடமிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் துர்கா என்ற மாணவி 100 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழல் மொழியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள், குடும்பத்தினர் உடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார். இந்த மாணவியின் தந்தை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

    இதையும் வாசிக்க:    10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம் என்ன?

    100% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
























    தமிழ்1
    ஆங்கிலம்45
    கணிதம்2186
    அறிவியல்3841
    சமூக அறிவியல்1009


    தேர்வெழுதிய 9,12,620 மாணவர்களில் ஒரே ஒரு மாணவி மட்டும் மொழித் தேர்வில் நூறு மதிப்பெண் பெற்ற துர்காவுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அளித்து பாராட்ட வேண்டும் என்று பலரும் சமூக ஊடகங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், தமிழ் விடைத்தாளை தனிக்கவனம் கொண்டு திருந்துவார்கள்; அதுபோக எழுத்துப் பிழை உன்னிப்பாக பார்ப்பார்கள் கையெழுத்தும் மிக அழகாக இருக்க வேண்டும் நினைப்பார்கள் .... இப்படி இருக்கையில் நூறு மதிப்பெண்கள் பெறுவது பெரிய நிகழ்வு என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: 10th Exam, 12th Exam results

    அடுத்த செய்தி