10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியீடு - ஆகஸ்ட் 31 வரை பதிவிறக்கம் செய்யலாம்

பள்ளி மாணவிகள்

பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  • Share this:
    10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல், இம்மாதம் 31 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தில் 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, மதிப்பெண் கணக்கீட்டில் நிலவும் குழப்பங்களைத் தவிர்க்க, சான்றிதழில் தேர்ச்சி மட்டும் குறிப்பிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், உயர்கல்வி சேர்க்கைக்கு 9ஆம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், 10ஆம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியாகிறது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

    எனவே, பள்ளி மாணவர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.” இவ்வாறு தெரிக்கப்பட்டுள்ளது.

    Must Read : அரசு கல்லூரிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை

    அதன்படி, இன்று முதல், 31ஆம் தேதிவரையில், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: