Home /News /education /

10th, 12th பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... தெரிந்துகொள்வது எப்படி?

10th, 12th பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... தெரிந்துகொள்வது எப்படி?

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன.

    தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த  ப்ளஸ் 2 மற்றும்  பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  இன்று  அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடவுள்ளார்.. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்  நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

    வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்

    ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்:   காலை  9.30  மணிக்கும்
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் : ( S.S.L.C) நண்பகல்  12.00  மணிக்கும் வெளியாகிறது.

    இணையதள முகவரி : www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.inwww.dge.tn.gov.in

    தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
    இதையும் படிக்க: பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
    பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் ,  தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

    தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: 10th Exam Result, 12th Exam results, Exam results

    அடுத்த செய்தி