• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது மூதாட்டி..!

நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது மூதாட்டி..!

நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது மூதாட்டி..!

நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய 105 வயது மூதாட்டி..!

  • News18
  • Last Updated :
  • Share this:
கேரளாவைச் சேர்ந்த 105 வயதான பாட்டி நான்காம் வகுப்பு தேர்வு எழுதி கல்வி கற்க வயதில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

பகீரதி அம்மா என்கிற இந்த மூதாட்டி சிறு வயதில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அவருடைய அம்மா இறந்துள்ளார். அதன் பிறகு கல்வியை தொடர முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு திருமணம்,  ஆறு குழந்தைகள் என வாழ்ந்து வந்துள்ளார். பின் அவருடைய கணவரும் இறந்து போக ஆறு குழந்தைகளையும் தனி மனுஷியாக வளர்த்து படிக்க வைத்துள்ளார்.

அதுவரை அவருக்கு நின்று போன கல்வியைத் தொடர முடியவில்லை. பின் அவர்களுடைய பிள்ளைகள் அவருடைய ஆசை என்ன என்று கேட்ட போது நின்று போன தன் படிப்பைத் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவரை மீண்டும் படிக்க வைத்து ஆசையை நிறைவேற்ற கேரள மாநில எழுத்தறிவு மிஷனில் இணைத்துள்ளனர். இந்த மிஷன் வயதானவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்க கேரள அரசு உருவாக்கிய அமைப்பு.



அதில் நான்காம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். அப்போது அவருக்கு உதவிய வசந்த குமார் என்பவர் ”100 வயதைக் கடந்தாலும் அவருடைய ஞாபகத் திறனும், கண் பார்வையும் மிகத் தெளிவாக உள்ளது. அவரே தேர்வு எழுதினார். இடையே முடியாத போது அவரின் கடைசி மகள் தான் உதவினார். கடினமாக இருந்தாலும் எப்படியோ சுற்றுச்சூழல் , கணிதம், மலையாளம் என மூன்று தேர்வுகளையும் எழுதி முடித்துள்ளார் ” என்று தெரிவித்தார்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: