மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்தால்,
சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்டு நடத்தப்பட்டு வரும், மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET) பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை நடத்தி வருகிறது.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், நுழைவுத் தேர்வு ஏதுமின்றி, நேரடி சேர்க்கை மூலம் 3 ஆண்டுகால பட்டய படிப்பை (DPMT/DPT) படிக்கலாம்.
இதேபோன்று, கல்லூரிகளில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் 2 ஆண்டு கால முதுநிலை பட்டப்படிப்பில் பிளாஸ்டிக் செயல்முறை மற்றும் சோதனை பயிற்சியில் நேரடியாக சேரலாம்.
இதையும் வாசிக்க: கல்வி வளர்ச்சி நாள்: கல்விக்கண் திறந்த காமராஜரின் கல்வி பங்களிப்பை போற்றும் தலைவர்கள்
12-ம் வகுப்பு பயின்று உயர் கல்வியை பெற முடியாதவர்கள், 3 ஆண்டு கால பட்டயப்படிப்பில் நேரடி சேர்க்கை மூலம் 2-ம் ஆண்டில் நேரடியாக அனுமதி பெற்று படிப்பை முடிக்கலாம்.
பாடநெறி |
கால அளவு |
தகுதி |
பிளாஸ்டிக் செயல்முறை மற்றும் சோதனை பயிற்சி முதுநிலை படிப்பு (PGD-PPT) |
2 |
3 ஆண்டுகால படிப்பு |
பட்டய படிப்பு பிளாஸ்டிக் மோல்டிங் தொழில்நுட்பம் (DPMT) |
3 |
10ம் வகுப்பு தேர்ச்சி |
பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் பட்டய படிப்பு (DPT) |
3 |
10ம் வகுப்பு தேர்ச்சி
|
நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந் தேதி ஆகும்.
மேலும் விவரங்களுக்கு,
தொலைபேசி எண்- 93600 98600 / 96002 54350
இதையும் வாசிக்க: உயர்கல்வி தரவரிசை பட்டியல்: 4வது ஆண்டாக சென்னை ஐஐடி தொடர்ந்து முதலிடம்
மின்னஞ்சல் முகவரி – Chennai@cipet.gov.in – ல் தொடர்பு கொள்ளுமாறு சென்னையில் உள்ள சிப்பெட் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் மற்றும் தலைவர் ஸ்ரீகாந்த் சிராலி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்ப்புகள்:
தொழில் தொடங்க வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.
சிறந்த தொழிற் பயிற்சி அளிக்கப்படும்.
மாணவர்களின் வேலை பெறும் திறன் 100% ஆக இருக்கும் (100% Placement Assistance)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.