முகப்பு /செய்தி /கல்வி / உயரிய திறனறிவை சோதிக்கும் வகையில் 10% கேள்விகள் - என்ஏஏசி

உயரிய திறனறிவை சோதிக்கும் வகையில் 10% கேள்விகள் - என்ஏஏசி

காட்சி படம்

காட்சி படம்

நாட்டின் உயர்க்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் அறிவு மட்டங்களையும், ஆற்றலையும் மறுமதிப்பீடு செய்வது தொடர்பான வெள்ளை அறிக்கையை என்ஏஏசி நிபுணர் குழு சமர்பித்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், கல்லூரி மதிப்பீட்டு முறையை மறுவடிவமைப்பு செய்ய தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) கீழ் உள்ள நிபுணர் குழு முன்மொழிந்துள்ளது.

அதன் கீழ், "கேள்வித் தாளில் 10% மதிப்பெண்கள், மாணவர்களின் உயரிய திறனறிவை (High Order Cognitive) ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் 20 முதல் 40% வரை உயர்த்தப்பட வேண்டும்" என்று நிபுணர் குழு தனது பரிந்துரையில் தெரிவித்தது.

முன்னதாக, நாட்டின் உயர்க்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் அறிவு மட்டங்களையும், ஆற்றலையும் மறுமதிப்பீடு செய்வது தொடர்பான வெள்ளை அறிக்கையை தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி)  நிபுணர் குழு சமர்பித்தது. என்ஏஏசி நிர்வாகக் குழுவின் தலைவர் பூஷன் பட்வர்தன், முன்னாள் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் கே.பி. மோகனன் ஆகியோர் இந்த வெள்ளை அறிக்கையைத் தயாரித்தனர்.

அறிக்கையில், " மாணவர்கள்  தங்கள் உள ஆற்றலைப் பயன்படுத்தி புதிய சிந்தனைகள், எண்ணக்கருக்கள் முதலியானவற்றை உருவாக்குவது முக்கியவம். புதிய கல்வி கொள்கையும் அதனை வலியுறுத்தி வருகிறது. மாணவர்களின் ஆழ்கற்றலை பரிசோதனை செய்யும் விதமாக  இளம்நிலை (Bachelor Degree) படிப்புகளில் 10% திறனறிவு கேள்விகள் இடம் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. 

உயரிய திறனறிவு கேள்விகள் என்றால் என்ன என்பதை நிபுணர் குழு பின்வருமாறு வரையறுக்கிறது. "கோடல் (Coding)  மூலமாகவோ, எழுத்து, மொழி போன்ற தொடர்பாடல் மூலமாகவோ அறிவை அணுகிக் கொள்ள கூடிய திறன்" என்று தெரிவிக்கிறது.                 

First published:

Tags: Education