Home /News /education /

10,12 ம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் - தேர்வுத்துறையின் முக்கிய அறிவிப்பு

10,12 ம் வகுப்பு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் - தேர்வுத்துறையின் முக்கிய அறிவிப்பு

தேர்வு

தேர்வு

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலம் திருப்புதல் தேர்வு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 10 -ம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறுவதால், 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலம் திருப்புதல் தேர்வு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் முறையே
    நாளை முதல் 16ந் தேதி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
    இந்நிலையில் 10.2.2022 (வியாழக்கிழமை) அன்று உள்ளாட்சித்
    தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், அன்று நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, 12 ம் வகுப்பு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு 17.2.2022 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும்.

    எனவே, பத்தாம் வகுப்பு ,12 ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான
    தேர்வுத் தேதி மாற்றம் குறித்த விபரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
    Published by:Ramprasath H
    First published:

    Tags: 12th exam, Education, Govt School

    அடுத்த செய்தி