ஹோம் /நியூஸ் /கல்வி /

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதி அறிவிப்பு - முழு அட்டவணை விவரம்

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதி அறிவிப்பு - முழு அட்டவணை விவரம்

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

Revision Exam Time Table : முதல் முறையாக அரசு தேர்வுகள் துறை அட்டவணை வெளியிட்டு திருப்புதல் தேர்வை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான தேதிகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.

கொரொனோ பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கு மேலாக நேரடியாக வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலை இருந்து வருகின்றது இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டன. இதனை அடுத்து நவம்பர் மாதம் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு நேரடியாக வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது இந்நிலையில் தற்போது ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள திருப்புதல் தேர்வு கூறிய தேதிகளை அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

Also Read : நீட் பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு உடனே வகுப்புகளை தொடங்க வேண்டும் - ராமதாஸ்!

அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 27ம் தேதி வரையிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 28ம் தேதி வரையிலும் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21 முதல் 26 ஆம் தேதி வரையிலும் பன்னிரண்டாம் வகுப்பு மார்ச் 21 முதல் 29 தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களின் அடிப்படையில் திருப்புதல் தேர்வுகளில் கேள்விகள் இடம்பெறும். மேலும் முதல் முறையாக அரசு தேர்வுகள் துறை அட்டவணை வெளியிட்டு திருப்புதல் தேர்வை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: School