தனித் தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தனி தேர்வுமையம்

தனித் தேர்வர்களுக்கு இந்த ஆண்டு தனி தேர்வுமையம்
மாதிரிப்படம்
  • Share this:
பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாக தேர்வு மையம் அமைக்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மற்றும் டுடோரியல் சென்டர்களில் பயிலும் தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு கடந்த ஆண்டு வரை தனித் தேர்வு மையங்கள் கிடையாது.

இந்த ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டாலும், இவர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுத உள்ளனர். இதனால் தனித்தேர்வர்களுக்கென ஒரு வினாத்தாளும், மாணவர்களுக்கென ஒரு வினாத்தாளும் தயாரிக்கப்பட உள்ளது. குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தனித்தேர்வர்களுக்கென இந்த ஆண்டு தனி தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.


First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading