ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சியைத் தொடங்கிய டுட்டி சந்த் - ஓட முடியாமல் திணறல்

100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையுடன் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை குவித்தவர் டுட்டி சந்த்.

ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சியைத் தொடங்கிய டுட்டி சந்த் - ஓட முடியாமல் திணறல்
100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையுடன் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை குவித்தவர் டுட்டி சந்த்.
  • Share this:
இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவில் டுட்டி சந்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியதும் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் தனது வழக்கமான பயிற்சியை அவர் தொடங்கியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பயிற்சி மேற்கொண்ட டுட்டி சந்த் இந்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி பயிற்சியாளர் இல்லாமல் தனியாகத்தான் பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அத்துடன் ஓடுவதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். மீண்டும் பழைய நிலமைக்கு வர இன்னும் இரண்டு மாதம் ஆகும் எனவும் தெரிவித்தார். தற்பொழுது உடல் தகுதியை மேம்படுத்தும் பயிற்சியை மேற்கொள்வதாகவும், இதே போல் இரண்டு, மூன்று மாதங்கள் கடினமாக பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே தன்னுடைய பழைய ஓட்டவேகத்தை அடைய முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


வருகிற டிசம்பர் மாதம் வரை சர்வதேச போட்டிகள் ஏதும் நடக்கப்போவதில்லை, எனவே அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு என்னுடைய முழு திறனையும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் வெளிப்படுத்துவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Also see...

First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading