”சாம்பார் வெங்காயம் ஸ்டாக் இல்லை” புதுவையில் கடும் தட்டுப்பாடு...!

புதுச்சேரியில் வெங்காய தட்டுப்பாடால் சின்ன வெங்காயம் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது.

”சாம்பார் வெங்காயம் ஸ்டாக் இல்லை” புதுவையில் கடும் தட்டுப்பாடு...!
புதுச்சேரியில் வெங்காய தட்டுப்பாடால் சின்ன வெங்காயம் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது.
  • News18
  • Last Updated: December 5, 2019, 12:02 PM IST
  • Share this:
தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதே வேளையில் வெங்காய வரத்து குறைந்து வருவதால் கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

புதுச்சேரிக்கு நாள் ஒன்றிற்கு 100 டன் வெங்காயம் தேவைப்படுகிறது. தற்போது 20 டன் வெங்காயம் மட்டுமே கிடைக்கிறது. வழக்கமாக ஆந்திரா,பெங்களூரு மற்றும் பூனேவில் இருந்து புதுச்சேரிக்கு வெங்காயம் வாங்கப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆந்திராவில் ரேஷன் மூலம் வெங்காயம் விற்கப்படுவதால் எல்லை தாண்டி வெங்காயம் அனுப்பப்படுவதில்லை. பெங்களூரு மார்க்கெட்டில் 100 மூட்டை கேட்டால் 20 மூட்டை மட்டுமே அனுப்புகிறார்கள்.


இதனால் புதுச்சேரி வியாபாரிகள் பூனேவிற்கு செல்கின்றனர். அங்கும் கேட்கும் அளவில் 30ல் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது என்றும் வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

வரத்து குறைவாக இருப்பதால் புதுச்சேரியில் வெங்காயத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.
சாதா வெங்காயம் ஒரு கிலோ 120 முதல் 140 ரூபாய் வரையும் பெல்லாரி ஒரு கிலோ 160 முதல் 180 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.சின்ன வெங்காயம் 220 முதல் 250 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டிந்தாலும் சரக்கு இல்லை என பல கடைகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளன.

Also see...
First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories