கொரோனாவை வெல்லும் மனிதநேயம் : கூலித் தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் மருத்துவர்

கொரோனாவை வெல்லும் மனிதநேயம் : கூலித் தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் மருத்துவர்
  • Share this:
கொரோனா பாதிப்பால் அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கும் வேளையில் தினக்கூலி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையே வெறிச்சோடி இருக்கும் சூழலில் தன் வாழ்வாதாரத்தை நினைத்து வாடிக்கொண்டிருப்போருக்கு வெளிச்சமாக ஒருவர் இலவச உணவு வழங்கி வருகிறார். அவர்தான் மருத்துவர் யுவபாரத்.

ஆழ்வார்பேட்டையில் இயங்கிவரும் யுவா ஆயுர்வேத மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் அதன் நிறுவனர்தான் யுவபாரத். லண்டனில் மனோதத்துவம் படித்த இவர் மாத்திரைகள் இல்லாமல் முற்றிலும் இயற்கையான ஆயுர்வேத முறைப்படி நோய்களை குணப்படுத்தி வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்க தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் ஒருவேளை உணவிற்கே திண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக ஸ்விகி, கால்  டாக்ஸி டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தெருவோரக் உணவுக் கடைகளில் வேலை பார்த்தவர்கள், டீ கடையில் வேலை பார்த்தவர்கள் என பலரும் தினசரி வருமானமின்றி திண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு தங்களால் இயன்ற ஒருவேளை உணவை அளித்து வருகிறார் யுவபாரத்.


உணவு


அதுவும் ஆயுர்வேதமுறைப்படி தயாரித்த கஞ்சி , பேரிச்சை மற்றும் மூலிகை சூப் என அளிக்கின்றனர். வேலையின்றி திண்டாடுவோரின் நலன் கருதியே யுவபாரதி இந்த முயற்சியில் ஈடுபட்டதாக அதன் செயற்பாட்டாளர் கோதண்டபாணி கூறுகிறார்.

“கொரோனா மட்டுமல்ல நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாக இருந்தாலே எல்லா வைரஸும் நம்மைத் தாக்கும். எனவேதான் இவர்களுக்கு சதாரண உணவு வழங்காமல் இப்படி ஆயுர்வேத முறைப்படி உணவு வழங்க திட்டமிட்டோம் “ என உற்சாகமாகப் பேசுகிறார் கோதண்டபாணி.இவர் செங்கல்பட்டு திருத்தணி சித்த வைத்திய சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர். பல வருடங்களாக மூலிகை மருத்துவம் பார்த்து வரும் இவர் சித்த வைத்தியராக இருக்கிறார். உணவுகளில் மூலிகையின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வும் செய்து வருகிறார்.

ஆயுர்வேத மருத்துவர் யுகபாரதி நீண்ட நாள் நண்பர் என்பதால் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோதண்டபாணிதான் உணவுகளை ஆயுர்வேத மருந்தாக சமைத்துத் தருகிறார். “ சீர் கஞ்சி பிரதான உணவாக அளிக்கிறோம். அதில் அரிசி, பாசி பருப்பு, வெந்தையம், சீரகம் ஆகியவை கலந்து சமைத்து வழங்குகிறோம். அதோடு முருங்கை ஈர்க்கு, ஆடாதொடா, இஞ்சி, மஞ்சள், மிளகு, நாட்டுச் சர்க்கரை, கடுக்கா, இந்து உப்பு போன்ற மூலிகைக் கலந்த கசாயம் தருகிறோம்.  ஐந்து பேரிச்சை பழம் தருகிறோம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுகளை நீக்கும். நீண்ட நேரத்திற்கு பசிக்காது. அதுமட்டுமன்றி வைரஸ் முதலில் தாக்கக் கூடிய நுரையீரலுக்கு இதுபோன்ற மூலிகை உணவு அதிமருந்தாக இருக்கும் “ என்கிறார்.

கடந்த மூன்று நாட்களாக இந்த உணவுகளை வழங்கி வருகின்றனர். காலை 11 மணிக்கு உணவுகளை வழங்கத் தொடங்குவதாக தண்டாயுதபாணி கூறுகிறார். தினசரி 150 முதல் 200 பேர் வரை உணவு வாங்கிச் செல்வதாகக் குறிப்பிடுகிறார். “ இந்த உணவுகளை பொதுமக்கள் மட்டுமல்ல, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் கூட இந்த கஞ்சியும், கஷாயமும்தான் குடிக்கின்றனர்” என்கிறார்.

மேலும் பேசிய அவர் “ இந்த கொரோனா பாதிப்பினால் மட்டுமல்ல. ஆரம்பம் முதலே ஆயுர்வேதத்தைக் கடைபிடித்து வந்தால் எந்த நோயும், வைரஸும் அண்டாது. காலநிலை மாற்றத்தால் மக்கள் உணவு விஷயத்தில் திசை மாறிப் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கான எச்சரிக்கையாகவே இந்த கொரோனா வைரஸைப் பார்க்கிறேன். இனி வரும் காலங்களிலாவது மக்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இயற்கை ஆயுர்வேதமே ஆரோக்கியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என நிறைவு செய்கிறார் கோதண்டபாணி.
First published: March 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading