தடுப்புக்காவலில் இருந்து பரூக் அப்துல்லா விடுவிப்பு - ஸ்டாலின் வரவேற்பு

"உமர் அப்துல்லா, மெகபூபா முப்தியையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரிக்கை"

தடுப்புக்காவலில் இருந்து பரூக் அப்துல்லா விடுவிப்பு - ஸ்டாலின் வரவேற்பு
"உமர் அப்துல்லா, மெகபூபா முப்தியையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரிக்கை"
  • Share this:
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த பல அரசியல் தலைவர்கள், அண்மையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில், பரூக் அப்துல்லாவின் விடுதலை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பதாக ட்வீட் செய்துள்ள ஸ்டாலின், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தியையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see...
First published: March 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading