தமிழ் சினிமாவை உலக சினிமாவாக வளர்த்தெடுத்தவர்: சசிகுமார், ரஞ்சித் புகழாரம்

இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவை உலக சினிமாவாக வளர்த்தெடுத்தவர்: சசிகுமார், ரஞ்சித் புகழாரம்
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய வெகுசில இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் மகேந்திரன்.
  • News18
  • Last Updated: April 2, 2019, 2:37 PM IST
  • Share this:
இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு இயக்குநர்கள் சசிகுமார், பா.ரஞ்சித் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அலெக்ஸாண்டராக பிறந்த மகேந்திரனை அவரது பேச்சால் கவர்ந்த எம்.ஜி.ஆர், திரைத்துறைக்கு அழைத்து வந்தார். ஆரம்ப காலத்தில் திரைப்படங்களுக்கு கதை வசனம் மட்டுமே எழுதி வந்த மகேந்திரன் இயக்கிய முதல் படமான  ‘முள்ளும் மலரும் ’ இன்று வரை தமிழ் சினிமா கண்ட சிறந்த படைப்புகளுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு முன்னேற்றியதில் இயக்குநர் மகேந்திரனின் படங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு. கதை, இயக்கம், நடிப்பு என அனைத்துத் துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் மகேந்திரன்.


கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் மகேந்திரன் இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைத்துறை, அரசியல் தலைவர்கள் பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ் சினிமாவை உலக சினிமாவாக வளர்த்தெடுத்த ஆளுமை மகேந்திரன் ஐயா. மறைந்தாலும் தன் கலைப் படைப்புகள் வழி நம்மோடு கலந்திருக்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இயக்குநர் மகேந்திரன் எளிமை தான் உங்கள் இலக்கு. திரைவிமர்சனம் எழுதியது மட்டும் இல்லாமல் எது கலைத்தன்மையோடு வெகு சன மக்களை கவர்ந்திழுக்கும் சினிமா என்று உதிரிப் பூக்கள், முள்ளும் மலரும் போன்ற படங்களை எடுத்து காட்டிய அதிசயம் நீங்கள். ஐயா உம் படைப்புகள் எப்போதும் வாழும்’ என்று பதிவிட்டுள்ளார்.

.

PHOTOS: 'காட்சி மொழி கவிஞன்' இயக்குனர் மகேந்திரன்!

திரையுலக இயக்குனர்களின் ‘கதாநாயகர்’ மகேந்திரன்: ஸ்டாலின் புகழாரம்!


 

Also watchசினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐபிஎல் தகவல்கள்:

First published: April 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories