Home /News /dindigul /

பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..!

பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..!

ரோஜா மலர்கள்

ரோஜா மலர்கள்

Kodaikanal: கொடைக்கான‌லுக்கு வ‌ந்திருந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் சிவ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ வ‌கையான‌ ரோஜா ம‌ல‌ர்க‌ளை க‌ண்டும், ர‌சித்தும் புகைப்ப‌ட‌ம் எடுத்தும் ம‌கிழ்ந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kodaikanal, India
    உலக ரோஜா தினத்தில் கொடைக்கானல் ரோஜா தோட்டம் ம‌ற்றும் பிரைய‌ண்ட் பூங்காவில்  கண்ணை கவரும் வண்ணங்களில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசித்து ம‌கிழும் சுற்றுலாப்பயணிகள்.

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி புற்றுநோய் நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பதும் அந்த நாளை உலக ரோஜா தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதிலும் உடலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த ரோஜா தினம் அவர்களுக்காகவே மகிழ்ச்சியை கொண்டு வருவதற்காகவும் , அவர்களை உற்சாக படுத்துவதற்காகவும் அவர்கள் தனியாள் இல்லை என்று கூறுவதற்கும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கனடாவை சேர்ந்த சிறுமி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த சிறுமிக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் உலக ரோஜா தினம் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் அந்த சிறுமி தன்னம்பிக்கை காரணமாக சுமார் 6 மாதங்கள் உயிர் வாழ்ந்தார் என்பதும் வ‌ர‌லாறு.

    மலர்கள்


    இத‌னிடையே மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதி தமிழகத்தில் உள்ள முக்கிய குளிர் பிரதேசமாகும், கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் மிகு  காட்சிகளை காண‌வும் இதமான காலநிலையை அனுப‌விக்க‌வும், ப‌சுமை போர்த்திய‌ ம‌லை முக‌டுக‌ளையும் மேனியில் த‌வ‌ழும் மேக‌ கூட்ட‌ங்க‌ளை க‌ண்டு ர‌சிக்க‌வும்  தமிழகம் மட்டுமல்லாது உலகின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறுமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

    Also Read:  வெள்ளிக்கம்பியை உருக்கியது போல் கொட்டும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி.. கொள்ளை அழகு..!

    இந்நிலையில் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை மேலும் க‌வ‌ரும் வித‌மாக‌வும் அவ‌ர்க‌ளை வ‌ர‌வேற்கும் வித‌மாக‌வும் பிரைய‌ண்ட்பூங்காவில் இர‌ண்டு ஏக்க‌ர்  ப‌ர‌ப்ப‌ள‌வில் சுமார் 20 ம‌ல‌ர்ப‌டுகைக‌ளில் 746 வ‌கையான‌ ரோஜாக்க‌ளும், ரோஜாபூங்காவில் 10 ஏக்க‌ர் ப‌ர‌ப்ப‌ள‌வில் சுமார் 50 ம‌ல‌ர்ப‌டுகைக‌ளில் 1500 வ‌கையான‌ ரோஜாக்க‌ளும் காட்சிபடுத்த‌ப்ப‌ட்டு இன்ற‌ள‌விலும் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌து.

    இந்நிலையில் நேற்று உல‌க‌ ரோஜா தின‌த்தினை முன்னிட்டு கொடைக்கான‌லுக்கு வ‌ந்திருந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் சிவ‌ப்பு, ம‌ஞ்ச‌ள், இள‌ஞ்சிவ‌ப்பு,ஊதா உள்ளிட்ட‌ கொடி ரோஸ், ரோஸ், கிரிப்ப‌ர்ரோஸ், பிர‌ப்ஸ், ஷ்ர‌ப்ஸ் உள்ளிட்ட‌ ப‌ல‌ வ‌கையான‌ ரோஜா ம‌ல‌ர்க‌ளை க‌ண்டும், ர‌சித்தும் புகைப்ப‌ட‌ம் எடுத்தும் ம‌கிழ்ந்தனர்.

     செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக் (கொடைக்கான‌ல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Kodaikanal, Rose, Rose Day, Tamil News

    அடுத்த செய்தி