ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

கொடைக்கானல் மலைச்சாலைகளில் உலா வரும் காட்டுயானைகள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கொடைக்கானல் மலைச்சாலைகளில் உலா வரும் காட்டுயானைகள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

யானைகள் கூட்டம்

யானைகள் கூட்டம்

காட்டுயானை கூட்டங்களை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kodaikanal | Tamil Nadu

கொடைக்கான‌ல் அருகே தாண்டிக்குடி பிர‌தான‌ ம‌லைச்சாலைக‌ளிலும் குடியிருப்பு வீதிகளில் உலா வ‌ரும் காட்டு யானைக‌ளால் பொதும‌க்க‌ள் அச்ச‌மடைந்துள்ளனர்.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் மலைக்கிராமப்ப‌குதிக‌ளான‌ பேத்துப்பாறை, புலியூர், தாண்டிக்குடி, த‌டிய‌ன்குடிசை உள்ளிட்ட‌ ம‌லைகிராம‌ங்க‌ளில் உள்ள‌ த‌னியார் தோட்ட‌ங்க‌ளிலும், விவ‌சாய‌ விளைநில‌ங்க‌ளிலும்,காட்டுயானைக‌ள், கூட்ட‌ம் கூட்ட‌மாக‌ முகாமிட்டு விவ‌சாய‌ நில‌ங்க‌ளை சேத‌ப்ப‌டுத்தி வருவது தொடர்கதையாகியுள்ளது.

இந்நிலையில்  இர‌வு நேர‌ங்க‌ளில் தாண்டிக்குடி பிர‌தான‌ ம‌லைச்சாலைக‌ளிலும், தாண்டிக்குடி கால‌ணி குடியிருப்பு ப‌குதிக‌ளிலும் காட்டு யானைக‌ள் கூட்ட‌ம்  திடீரென‌ உலா வ‌ருவ‌தால் பொதும‌க்க‌ளும், வாக‌ன‌ ஓட்டிக‌ளும் அச்சத்துடன் வீடுக‌ளிலேயே முடங்கியுள்ளனர்.

Also Read: தொட‌ர் விடுமுறை.. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - 2கி.மீ-க்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

மேலும் தாங்கள் விளைவித்த‌ விளை பொருட்க‌ளை பாதுகாக்க‌ இர‌வில் தோட்டக்காவலுக்கு செல்லமுடியாமல் விவசாயிகளும்  அச்சமடைந்துள்ளனர்.

இதனால் காட்டுயானை கூட்ட‌ங்க‌ளை நிர‌ந்த‌ர‌மாக‌ வ‌னப்ப‌குதிக‌ளுக்குள் விர‌ட்ட‌ வ‌ன‌த்துறையின‌ர் துரித ந‌ட‌வடிக்கை எடுக்க‌ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Elephant, Kodaikanal