ஹோம் /நியூஸ் /திண்டுக்கல் /

நாங்கள் துணிவாக இருக்கிறோம்.. வாரிசு அரசியலை எதிர்க்கிறோம் - அண்ணாமலை

நாங்கள் துணிவாக இருக்கிறோம்.. வாரிசு அரசியலை எதிர்க்கிறோம் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

சட்டபேரவையில் ஆளுநர் பேசியது சரி என்றும் திமுக தான் அதை வைத்து அரசியல் செய்கிறது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dindigul, India

சட்டப்பேரவையில் ஆளுநர் சொந்தக் கருத்தை திணித்துப் பேசவில்லை என்றும் ஆளுநர் பேசியதை திமுக அரசியலுக்காக பயன்படுத்துவதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, மத்திய, மாநில அரசுகள் ஒத்துப் போனால்தான், அரசு சுமுகமாக நடைபெறும் என தெரிவித்தார்.

தன்னை பொறுத்தவரை தமிழ்நாடும், தமிழகமும் ஒன்றுதான் எனக் குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் ஸ்டாலின் கூட, இந்த இரண்டு பெயர்களையும் பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும், ஆளுநர் பேசியதை வைத்து திமுக அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினார்.

ஆளுநருடன் தமிழ்நாடு அரசு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற அவர், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே ஆளுநர் வந்ததாகவும், அரசியலில் துணிவாக இருப்பதாகவும், வாரிசு அரசியலைத் தான் எதிர்ப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, BJP, DMK, RN Ravi, Tamil News, Thunivu, Varisu