Home /News /dindigul /

தொட‌ர் ம‌ழையால் கொடைக்கானலில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்...

தொட‌ர் ம‌ழையால் கொடைக்கானலில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்...

கொடைக்கானல் அருவியில் ஆர்பரிக்கும் தண்ணீர்

கொடைக்கானல் அருவியில் ஆர்பரிக்கும் தண்ணீர்

Kodaikanal | கொடைக்கானல் மலைப்பகுதிக‌ளில் பெய்து வ‌ரும் தொட‌ர் ம‌ழையால் மேல்ம‌லைக்கிராம‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kodaikanal, India
    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நீர் நிலைகளுக்குச் செல்லும் ஓடைகள், அருவிகள், நீர் வீழ்ச்சிகள் என அனைத்திலும் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் கொடைக்கானல் மேல்ம‌லை கிராம‌ப்ப‌குதிக‌ளில் அமைந்துள்ள புல‌விச்சாறு அருவி, செண்ப‌க‌ப்ப‌ட்டி அருவி, புத்தூர் அருவி, சேனான் ஆறு, பொல‌ங்க‌ர் ஓடை உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.

    மேலும் ஆங்காங்கே புதியதாக சிறு சிறு அருவிகளும் தோன்றி ப‌சுமை போர்த்திய‌ ம‌லைத் தொட‌ர்க‌ளுக்கு இடையில் வெள்ளிக்க‌ம்பியை உருக்கி கொட்டிய‌து போல‌ சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக  கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் பச்சை க‌ம்ப‌ள‌ம் விரித்தது போல காட்சியளிக்கிறது..



    Also see... மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

    இந்த காட்சிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். அத்துடன் நீர் பெருக்கெடுத்து ஓடும் அருவிகளின் முன்னே சுற்றுலா பயணிகள் செல்பி ம‌ற்றும் புகைப்ப‌ட‌ம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக், கொடைக்கான‌ல்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Falls, Heavy rain, Kodaikanal

    அடுத்த செய்தி