Home /News /dindigul /

கொடைக்கானல் தூண் பாறையை மறைத்து கட்டப்பட்ட சுவர்... சர்ச்சையால் இடிக்கும் பணி துவக்கம்...

கொடைக்கானல் தூண் பாறையை மறைத்து கட்டப்பட்ட சுவர்... சர்ச்சையால் இடிக்கும் பணி துவக்கம்...

கொடைக்கானல் தூண் பாறை

கொடைக்கானல் தூண் பாறை

Kodaikanal | கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தூண் பாறை சுற்றுலா தளத்தின் முகப்பு பகுதியில் திடீரென வனத்துறையினர் 22 அடி எழுப்பிய சுவ‌ர் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த சுவரை இடிக்கும் பணி தற்போது துவ‌க்க‌ப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kodaikanal, India
    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக தூண் பாறை (பில்லர் ராக்)  உள்ளது. இந்த சுற்றுலா தலம் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக  தூண் பாறை அமைந்துள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் (பில்லர் ராக்) தூண் பாறைகள் இடையினில் தவிழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்களை ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுட‌ன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து செல்கின்ற‌ன‌ர்.

    மேலும் இந்த இடத்தினை உள்ளே சென்று கண்டு ரசிக்க தூண்பாறை நுழைவுவாயில் ப‌குதியில் வனத்துறையினர் க‌ட்ட‌ண‌ம் வசூல் செய்கின்றனர். சில சுற்றுலா பயணிகள் சாலையில் பயணித்து கொண்டும், முகப்பு பகுதியின் முன்பு நின்றும் இந்த சுற்றுலா தலத்தை கண்டு ரசித்து செல்வது வழக்கமான ஒன்றாக இருந்த‌து.

    இந்நிலையில் தூண்பாறை சுற்றுலா தலத்தின் முகப்பு பகுதியில் திடீரென்று வனத்துறையினர் 22 அடி சுவரை எழுப்பினர். இத‌னை தொட‌ர்ந்து தூண் பாறை சுற்றுலா தலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முகப்பு ப‌குதியில் இருந்து தூண்பாறையின் இய‌ற்கை அழ‌கினை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்ற‌த்துட‌ன் அதிருப்தியும் அடைந்த‌ன‌ர்.

    மேலும் கொடைக்கானல் வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள், இயற்கை ஆர்வலர்கள், பொதும‌க்க‌ள் உள்ளிட்டோர் தூண்பாறையை ம‌றைத்து எழுப்பும் சுவ‌ர் ப‌ணிக‌ளுக்கு தங்களது எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மேலும் படிக்க... பொன்னேரி அருகே தொன்மையான புத்தர் சிலை கண்டெடுப்பு..

    இந்நிலையில் வ‌ன‌த்துறையின‌ர்  22 அடி உயர‌ சுவ‌ரை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சுவர் க‌ட்டிய‌தில் அரசு பணம் வீண் விரையம் ஆகியுள்ள‌து. ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிட‌த்த‌க்க‌து...

    செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக்,கொடைக்கான‌ல் 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Dindigul, Kodaikanal

    அடுத்த செய்தி